இந்தியா

உலகிலேயே இந்தியாவில் தான் குறைந்த இறப்பு விகிதம்” – மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் உலகிலேயே மிக குறைவாக 2.82 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்வது தவறானது என தெரிவித்தார். நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப பாதிப்பு எண்ணிக்கை ஒப்பீடு செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 73 சதவீதம் பேர் மற்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய லால் அகர்வால், இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 48.07 சதவீதமாக உள்ளதாகவும், இறப்பு விகிதம் உலகிலேயே மிக குறைவாக 2.82 சதவீகிதமாக இருப்பதாக விளக்கம் அளித்தார்.

கருத்து தெரிவிக்க