விளையாட்டு

கோல்ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்திய பெண்கள் ஆக்கி அணி கேப்டன் ராணி ராம்பால்

விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உலக விளையாட்டு அமைப்பின் சார்பில் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற சிறப்பையும் பெற்றார். இதனால் ராணி ராம்பாலுக்கு கேல் ரத்னா விருது கிடைக்க கணிசமான வாய்ப்புள்ளது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டால், இந்த கவுரவத்தை பெறும் முதல் இந்திய ஆக்கி வீராங்கனை என்ற பெருமையை பெறுவார்.
2016-ம் ஆண்டு ஜனவரி முதல் 2019-ம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் வீரர், வீராங்கனைகள் செய்த சாதனைகள் கவனத்தில் கொண்டு கோல்ரத்னா விருது வழங்கப்படுகிறது.

அதன்படி 2017-ம் ஆண்டில் ஆசிய கோப்பை போட்டியில் வாகை சூடி அசத்திய இந்திய பெண்கள் ஆக்கி அணி, 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது.
2019-ம் ஆண்டு நவம்பர் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்றில் இந்திய அணி இரண்டு ஆட்டங்களின் முடிவில் 6-5 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் 2வது ஆட்டத்தில் ராணி ராம்பால் அடித்த ஒரே கோல் தான் ஒலிம்பிக்குக்கு தகுதி பெறுவதற்கு வித்திட்டது. அவரது தலைமையில் இந்திய அணி சிறந்த தரநிலையாக 9வது இடத்தைப் பிடித்தது.

கருத்து தெரிவிக்க