நேற்று (பெப்ரவரி 14) பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் பாராளுமன்ற சிறப்பு அமர்வுக்கு மகிழுந்தில் சென்று கொண்டிருந்த போது வென்னப்புவ கொஸ்வத்த ஹல்தடுவன பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்தமையால் மொஹமட் பைசலின் மகிழுந்தை செலுத்தியவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று (பெப்ரவரி 15) மொஹமட் பைசலின் மகிழுந்து சாரதி மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்த்து 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க