இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வலம்புரி சங்குகளை விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர்கள் கைது

இன்று (பெப்ரவரி 11) திருகோணமலை இறக்கக் கண்டி பகுதியில் 4 கோடியே 75 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரி சங்குகளை விற்பனை செய்ய முயன்ற மூன்று சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கிணங்க குறித்த சந்தேக நபர்கள் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு 05 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் மார்ச் 25ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க