அஹூங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி – கொழும்பு பிரதான வீதியில் பலப்பிட்டிய பேருந்து தரிப்பிடத்திற்கருகில்
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தொன்று பலப்பிட்டிய பேருந்து தரிப்பிடத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் புறப்பட்ட போது துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 60 வயதுடைய நபர் காயமடைந்த நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க