உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மூத்த ஆளுமை ஒருவரை வன்னி பெருநிலப்பரப்பு இழந்தது.

வன்னி பெருநிலப்பரப்பின் மூத்த ஆளுமைகளில் ஒருவரான சித்த வைத்தியர் அரியகுட்டி நாகமணி தனது 83 ஆவது வயதில் காலமானார்.

முல்லைத்தீவு மாவடடத்தின் கற்சிலை மடுவில் 1936 ம் ஆண்டு பிறந்த இவர் சித்த வைத்தியர் அரியகுட்டியின் ஏக புதல்வனாவார்.

தனது தந்தையின் வழியில் சித்த வைத்தியத்துறையில் 30 ஆவது வயதில் கால் பதித்த இவர் இயற்கை எய்தும் வரை தொடர்ந்து நோய் தீர்க்கும் மணிமந்திர ஒளடத துறையில் கைதேந்தவராக விளங்கினார்

விஷக்கடி மகப்பேற்று வைத்தியம் சிறு பிள்ளைகளுக்கான மருத்துவம் சர்பரோக மருத்துவம் ஆகியவற்றில் இவர் சிறந்து விளங்கினார்.

இவரது சேவையை பாராட்டி அகில இலங்கை சித்த மருத்துவ சபை விசாரண எனும் பட்டத்தை வழங்கி மதிப்பளித்துள்ளது.

துணுக்காய் வலயக்கல்வி அலுவலகம் 2014 ம் ஆண்டு கலை விழாவில் சிறப்பு கௌரவத்தை வழங்கியது.

2017 ம் ஆண்டு ஒட்டுசுட்டான் பிரதேசக் கலாசாரப் பேரவை, மருத்துவத் துறைக்கான அதி உயர் விருத்தாகிய பண்டாரவன்னியன் விருதையும் வழங்கியது.

கருத்து தெரிவிக்க