யாழ்பாணம் காரைநகர் கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்கள் நேற்று (ஜனவரி 09) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஜனவரி 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க