சுற்றுலா வருமானத்தை அதிகரிக்கும் புதிய முயற்சியாக பௌர்ணமி தினத்தை இலக்காகக் கொண்டு மாதத்திற்கு ஐந்து நாட்கள் ‘நிலவில் சிகிரியா’ என்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சுற்றுலா அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க சுற்றுலாப் பயணிகள் பௌர்ணமி தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னும் பௌர்ணமி தினத்தன்றும் மற்றும் அதற்கு பின் இரண்டு நாட்களென 05 நாட்கள் சிகிரியாவை இரவு நேரத்தில் பார்வையிட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க