உலகம்

பிஜி தீவில் 6.7 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

இன்று(திங்கட்கிழமை) காலை 6.7 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

தலைநகர் சுவாவுக்கு கிழக்கே 283 கி.மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 534 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக அதிக ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பூமி குலுங்கியதை தங்களால் பெருமளவு உணர முடியவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிர் சேதம், பொருட் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, குறித்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எவையும் விடுக்கப்படவில்லை.

பசிபிக்கடல் பிராந்தியத்திலுள்ள பிஜி தீவுகள் பூகம்ப அபாய வளையத்தில் காணப்படுகின்றது. இதன்காரணமாக அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க