சினிமா

“தளபதி 63“ படத்தில் இணையும் மற்றுமொரு பிரபல நகைச்சுவை நடிகர்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி 63’ திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியாகியிருந்தது.

விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படம் வழக்கம்போல் அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தளபதி 63′ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்யுடன் நடிகர் விவேக் இணையும் செய்தி ஏற்கனவே வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகிபாபுவும் ‘தளபதி 63’ படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

‘சர்கார்’ படத்தில் விஜய்யுடன் யோகிபாபு நடித்த ஒருசில காட்சிகளுக்கே பெரும் வரவேற்பு இருந்த நிலையில் ‘தளபதி 63’ படத்தில் விஜய்யுடன் அவர் மீண்டும் இணைவது எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

கருத்து தெரிவிக்க