உலகம்

ஜனாதிபதி ட்ரம்பின் உத்தரவிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை

தெற்கு அமெரிக்க எல்லையை சட்டவிரோதமாக கடந்துவரும் குடியேற்றவாசிகளுக்கு புகலிடம் மறுக்கப்படும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவிற்கு அமெரிக்க மத்திய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோவிலுள்ள அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜோன் டைகர் இந்த தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சிவில் உரிமைக் குழுக்களின் வாதங்களுக்கு செவிமடுத்த நீதிபதி, இத்தடை உத்தரவை அறிவித்துள்ளார்.

எல்லையை கடக்கும் குடியேற்றவாசிகளின் அதிகரிப்பை தொடர்ந்து குடியேற்றவாசிகளுக்கு புகலிடம் மறுப்பதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் இம்மாத ஆரம்பத்தில் கையெழுத்திட்டார்.

குடியேற்றவாசிகளின் செயற்பாட்டினால் தேசிய நலன் மீதான கவலை எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டி ஜனாதிபதி இவ்வறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், சிவில் உரிமை குழுக்கள் அதனை எதிர்த்து வந்தன்

அதற்கமைய, ஜனாதிபதியின் தீர்மானம் சட்டவிரோதமானது எனத் தெரிவித்து சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க