புகையிரத இருக்கைகள் முன்பதிவு தொடர்பில் இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கிணங்க புகையிரத இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நாளை (ஜனவரி 1) முதல் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான பயணச்சீட்டு பணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்கும் போது பயணச்சீட்டு உரிமையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்த பயணிகளின் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டின் நகலை தொடருந்து நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க