சீனாவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விரைவில் கனடாவுக்கு செல்லவுள்ளார்.
இந்தப்பயணம் பெரும்பாலும் மே 29 முதல் 31ஆம் திகதி அமையக்கூடும்.
கனடாவில் நடைபெறும் அமரிக்காவின் ஆதரவிலான சர்வதேச மாநாட்டுக்காகவே ஜனாதிபதியின் பயணம் இடம்பெறவுள்ளது.
சீனாவுக்கு சென்று திரும்பியதும் இதற்கான பயண ஒழுங்குகளை செய்யுமாறு அவர் அதிகாரிகளை பணித்துள்ளார்.
எனினும் இந்த சந்திப்பின்போது கனேடிய பிரதமரை சந்திக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
மைத்ரியின் இந்த பயணம் ராஜதந்திரமட்ட நகர்வா? என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
எனினும் சீனாவின் ஜனாதிபதியை சந்தித்தமை, மேற்குலக நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதும், கடந்த ஒக்டோபரில் அரசியலமைப்புக்கு முரணாக தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் மேற்குலக நாடுகள் காட்டிய எதிர்ப்புகளும் மைத்ரியின் செல்வாக்கில் சரிவை ஏற்படுத்தியுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரட்ம்ப், பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உட்பட்டவர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியமையும் ஜனாதிபதியின் கனேடிய பயணத்துக்கான தூண்டுதலாக இருக்கலாம் என்று ராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
கருத்து தெரிவிக்க