ரிசாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக் குறித்து இதுவரை தம்முடன் கலந்துரையாடப்படவில்லை என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.
எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொறுப்பேற்கவேண்டிய முதல் ஆள் ஜனாதிபதியாகும்.
அடுத்ததாக பிரதமரும் அமைச்சரவையும் அதற்கு பொறுப்புக்கூறவேண்டும்.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கள் அதிகமாகவே இருந்துள்ளன.
னினும் இதனை விடுத்து. ஏன் முஸ்லிம் அமைச்சர் ஒருவரை இலக்குவைத்து இந்த பிரேரணை கொண்டு வரப்படுகிறது என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வரும்போது ஜேவிபி அது தொடர்பில் முடிவெடுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க