நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக 2025 ஆண்டின் முதலாம் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் வீட்டுத் தேவைகளுக்கும் கைத்தொழில் தேவைகளுக்குமான உப்பு விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படலாமெனவும் அதற்குத் தீர்வாக தயார் செய்து சந்தைக்கு விநியோகிப்பதற்கான தீர்வை வரி வீதத்திற்கமைய பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அதற்கிணங்க 2025ம் ஆண்டு ஜனவரி 31ம் திகதி அல்லது அதற்கு முன்னர் அதிகபட்சமாக 30,000 மெற்றிக் தொன்களுக்கு உட்பட்டு பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத உப்பை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க