சினிமாசினிமாபுதியவை

கைது செய்யப்பட்டுள்ள நடிகர் அல்லு அர்ஜுன்

சமீபத்தில் வெளியாகிய புஷ்பா பாகம் 02 திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் எவ்வித முன்னறிவிப்புமின்றி ஐதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கிற்கு சென்றமையால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் சிக்கி உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த பெண் குடும்பத்தினரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்பு குழுவினர் மற்றும் திரையரங்கு நிர்வாகம் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று ( டிசம்பர் 13) அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க