உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் மொத்த விலை மற்றும் சில்லறை விலை குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை 215 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் உள்நாட்டு அரிசியின் மொத்த விலை 225 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் உள்நாட்டு கீரிசம்பாவின் மொத்த விலை 255 ரூபாவாகவும் அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க