புதியவைவணிக செய்திகள்

அரிசி விலை குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

அரிசி விலை குறித்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரிசி விற்பனையாளர்களுக்கு பணிப்புரையொன்றை விடுத்துள்ளார்.

அதற்கிணங்க ஒரு கிலோ நாட்டு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் நுகர்வோருக்கு வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் எதிர்வரும் 10 நாட்களுக்குள் அரிசி விலை தொடர்பில் தீவிரமாக செயற்படுமாறும் அதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க