இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தலைவர் கருத்து

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க கடந்த நவம்பர் 14ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 8361 வேட்பாளர்களில் 1985 பேர் மட்டுமே தங்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனரெனவும் குறித்த வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிசம்பர் 06) நிறுவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுத் தேர்தல் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க