சினிமா

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்களுக்காக, சொந்த வீடுகள் கட்டும் திட்டத்திற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதற்கட்டமாக ஆயிரம் குடியிருப்புகளுக்கு, முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களின் நலனுக்காக, செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் தமிழக அரசு சார்பில், 50 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில், திரைப்பட தொழிலாளர்களுக்கு, 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், பையனூரில் எம்ஜிஆர் படப்பிடிப்பு தளத்தில், ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைக்க 5 கோடி ரூபாய் வழங்கப்படும், என முதல்வர் அறிவித்திருந்தார்.அதன்படி ஏற்கனவே முதற்கட்டமாக, ஒரு கோடி ரூபாய் வழங்கிய நிலையில், 2-ஆம் கட்டமாக 50 லட்சத்திற்கான காசோலையை, ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

சென்னை அடுத்த பட்டாபிராமில், 235 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு, காணொலிக் காட்சி மூலமாக, முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 10 ஏக்கர் நிலப்பரப்பில், 5.57 லட்சம் சதுரஅடி பரப்பளவில், 21 அடுக்குமாடி கட்டடமாக, டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைய உள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகங்கள், தொழில் மையங்கள், பொது கட்டமைப்புகள், ஆகாய பூங்கா என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.

தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருபது லட்சம் ரூபா மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இசை மேதை நல்லப்ப சுவாமி நினைவுத்தூணை காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிச்சாமி திறந்துவைத்தார்.

கருத்து தெரிவிக்க