சிறுபோக பயிர்ச்செய்கை நிறைவடைந்துள்ளதால் சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
அதற்கிணங்க ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூபா 350-400 ரூபாவாகவும் ஒரு கிலோ கோவா 240 ரூபாவாகவும் சேனைக்கிழங்கு ஒரு கிலோ 450 ரூபாவாகவும் முருங்கைக்காய் ஒரு கிலோ 400 ரூபாவாகவும் ஒரு கிலோ போஞ்சி 500 முதல் 600 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு எதிர்வரும் பண்டிகை காலத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கலாமென சந்தை வட்டாரங்கள் கருத்து தெரிவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க