பிரபல பொலிவுட் இசையமைப்பாளர் வஜித் கான் மும்பையில் இன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 42.
சஜித் – வஜித் இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான வஜித் கான், சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சிறுநீரகப் பிரச்னைகள் அவருக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வஜித்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
சல்மானுக்காக கொரோனா விழிப்புணர்வுப் பாடல் ஒன்றை சஜித் – வஜித் ஆகிய இருவரும் சமீபத்தில் உருவாக்கினார்கள். சல்மான் கான் பாடிய இப்பாடல் ஏப்ரலில் வெளியானது.
சல்மான் கானின் Pyaar Kiya To Darna Kya என்கிற படத்தின் மூலம் சஜித் – வஜித் திரையுலகில் இசையமைப்பாளர்களாக அறிமுகமானார்கள். 2010-ல் சல்மான் நடித்த தபாங் படத்துக்கு இசையமைத்து இருவரும் புகழை எட்டினார்கள். “Tere mast mast do nain” and “Hud hud Dabangg” (“Dabangg”), “Do you wanna partner” and “Soni de nakhre” (“Partner”), “Mujhse shaadi karogi” and “Laal dupatta” (“Mujhse Shaadi Karogi”), “Mashallah” (Ek Tha Tiger”), “Chinta ta chita” (“Rowdy Rathore”), “Fevicol se” (“Dabangg 2”) and “Raat bhar” (“Heropanti”) போன்ற புகழ்பெற்ற பாடல்களை சஜித் – வஜித் இசையமைத்துள்ளார்கள். ஏராளமான பாடல்களையும் வஜித் கான் பாடியுள்ளார். வஜித் கானின் மறைவுக்கு பொலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
கருத்து தெரிவிக்க