தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
யுத்தம் நிறைவடைந்து பத்தாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்ற போதும் தமிழர்களுக்கான நீதி கிடைக்கவில்லை எனவும் நீதி கிடைக்கும் வரை தங்களுடைய உரிமைக்கான போராட்டங்கள் தொடரும் எனவும் அந்த வகையில் அதன் ஒரு அங்கமாக இந்த நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றன
தமிழினப் படுகொலை 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் காலை பத்து முப்பது மணிக்கு அக வணக்கத்தோடு ஆரம்பித்து தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் தனது உறவுகளை பறிகொடுத்த தனது ஒரு கையை இழந்த சிறுமி ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது
தொடர்ந்து மக்களால் உயிரிழந்தவர்களுக்காக நினைந்துருகி சுடர்கள் ஏற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து தமிழினப் படுகொலை நாளான மே 18 பிரகடனம் வெளியிடப்பட்டது
அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தியதோடு நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
கருத்து தெரிவிக்க