உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்வடக்கு செய்திகள்

முள்ளிவாய்க்காலில் விழிநீர் பெருக்கெடுக்க உணர்வுபூர்வமாக நினைவேந்தல் அனுஷ்டிப்பு

முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பின் 10 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலில் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.  

2009 ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில் முடிவுக்கு வந்த போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை, உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் இன்று நினைவு கூரிவருகின்றனர்.

இதன்படி வடக்கில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு  நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில்,   காலை 10.30 மணியளவில், நினைவேந்தல் நிகழ்வு அக வணக்கத்துடன் ஆரம்பமானது.

இறுதிக்கப்பட்ட போரின்போது முள்ளிவாய்க்காலில் தனது தாய் இறந்து கிடப்பதுகூட அறியாமல்,   தாய்ப்பால் குடித்த சிறுமியே  நினைவுச் சுடரை ஏற்றினார்.

போரால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அலைகடலென அணிதிரண்டு,  தமது உறவினர்களை நினைவுகூரி கதறி அழுதனர். இதனால், முள்ளிவாய்க்கால் கண்ணீர் குளமானது.  அத்துடன், பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

அரசியல் வாதிகள், தமிழ் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட மேலும் பலரும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டனர். வடக்கு, கிழக்கில் பல பகுதிகளிலும் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

கருத்து தெரிவிக்க