மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் நேற்று (அக்டோபர் 31) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கிணங்க 377 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீட்டர் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 371 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 319 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 06 ரூபாவினால் குறைக்கப்பட்டதுடன் அதன் புதிய விலை 313 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஒக்டேன் 92 பெற்றோல், ஒக்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றம் ஏற்படவில்லையென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க