எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (அக்டோபர் 26) தபால் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது.
அதற்கிணங்க பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நாளை (அக்டோபர் 27) ஆரம்பமாகி எதிர்வரும் நவம்பர் மாதம் 07 திகதி நிறைவடையுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் தபால் மூலம் முன்னெடுக்கப்படுவதால் தபால் சேவையாளர்களின் சகல விடுமுறைகளும் எதிர்வரும் பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க