இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சி முழமையான ஒத்துழைப்பை வழங்கும்.
இந்த உறுதிமொழியை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச. நேற்று ஜேர்மனின் தூதுவரிடம் வழங்கியுள்ளார்.
ஜேர்மனின் தூதுவர் ஜோர்ன் ரொட் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்தார்.
இதன்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறை நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் சிறுவர் அமைப்பு பிரதிநிதிகளும் நேற்று மஹிந்த ராஜபக்சவை சந்தித்தனர்.
இதன்போது, நாட்டின் இயல்புநிலையை மீண்டும் கொண்டு வர பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பவேண்டும் என்று கோரினர்.
இதற்கான கோரிக்கையை தாம் ஏற்கனவே விடுத்துள்ளதாக தெரிவி;த்த மஹிந்த ராஜபக்ச, பெற்றோர் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துள்ளமையே இதற்கான காரணம் என்றுக்கூறினார்.
கருத்து தெரிவிக்க