இலங்கைக்கு ஷரியா பல்கலைக்கழகம் அவசியமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மதரசா மற்றும் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களை முகாமைத்துவம் செய்யும் சட்டமூலத்தை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று அலரிமாளிகையில் நடைபெற்றது.
இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
” முஸ்லிம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் வரைவு திட்டம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படும். எனினும், இலங்கைக்கு ஷரியா பல்கலைக்கழகம் அவசியமில்லை.” என்றும் பிரதமர் கூறினார்.
தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் ஹலீம், சட்டமா அதிபர் உட்பட மேலும் சில அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து தெரிவிக்க