உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

‘சஹ்ரானுடன் எனக்கு தொடர்பே இல்லை’ – அடித்துக் கூறுகிறார் ஹில்புல்லாஹ்

தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுக்கும் தனக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என்று கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

உயர் கல்வி தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள்  இன்று  மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான தனியார் பல்கலைக்கழகத்துக்கு  கண்காணிப்பு பயணம் மேற்கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்ற ஹில்புல்லா, அவர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கும் பதில்களை வழங்கினார். அத்துடன், பல்கலைக்கழகத்தால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாடத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

இதையடுத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட கிழக்கு ஆளுநர்,

” சவுதி அரேபியாவிலுள்ள நிறுவனமொன்றிடமிருந்து வட்டியில்லாக் கடனை பெற்றே பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தோம். குறித்த கடன் தொகையை திரும்பி செலுத்த வேண்டும்.

இந்த பல்கலைக்கழகத்தை அரசாங்கத்தால் சுவீகரிக்க முடியாது. அவ்வாறு செய்ய வேண்டுமெனில் வர்த்தமானி அறிவித்தல் விடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டார்.

அத்துடன், சஹ்ரான் ஹாசீமுடனான தொடர்பு குறித்து எழுப்பட்ட கேள்விக்கு,

” சஹ்ரானுக்கும் எனக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.  நாடாளுமன்றத் தேர்தலின்போது வேட்பாளர்களை சந்தித்திருந்தார். அப்போது நானும் சென்றிருந்தேன். அதன்போது படம் எடுத்துக்கொண்டார்” என்று பதிலளித்தார்.

 

கருத்து தெரிவிக்க