தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்காக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்கள் வாக்களித்ததை உறுதிப்படுத்தும் வகையில் இடது கையின் சிறு விரலில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் அவ்வடையாளம் இன்னும் அவ்விரலிலுள்ளமையால் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் (262ம் அத்தியாயம்) 53அ (3)ம் பிரிவின் பிரகாரம் எதிர்வரும் அக்டோபர் 26ம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் போது இடது கைப் பெருவிரலில் அடையாளமிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளரின் இடது கையில் பெருவிரல் இல்லாதிருக்கும் பட்சத்தில் அவரது வலது கையிலுள்ள வேறேதெனுமொரு விரலில் அடையாளமிடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க