இலங்கை பொருளாதார நிலை குறித்து உலக வங்கி கருத்து தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க சுற்றுலாத்துறை மற்றும் தொழில்துறைகளில் வலுவான செயற்றிறன் மூலம் இவ்வருடத்திற்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதத்தை எட்டுமென உலக வங்கி தெரிவித்துள்ளது.
அத்தோடு இவ்வளர்ச்சியானது கடந்த 06 மாதங்களுக்கு முன்பிருந்த எதிர்ப்பார்ப்பை விட இரட்டிப்பானதெனவும் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி மீட்சி பலவீனமாக உள்ளதெனவும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுதல் மற்றும் கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமான முன்னெடுத்துச்செல்ல வேண்டுமெனவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க