” உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு நான் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்காவிடம் எந்தக் கோரிக்கையையும் முவைக்கவில்லை;” என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
எனினும், சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்காக இராணுவத் தளபதியுடன் தான் தொடர்பு கொண்டு வினவியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்,
” தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதால், நீர்கொழும்பு பிரதேசத்தில் பதற்ற நிலைமைகள் தோன்றலாம் என அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பலர் எனக்குத் தெரிவித்தனர்.
இதன் காரணமாக நீர்கொழும்பு பிரதேச பள்ளிவாசல்களுக்குப் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யுமாறும் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்திருந்தனர்.
கருத்து தெரிவிக்க