நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு தயாராகவே இருக்கின்றோம் – என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இலங்கையானது சிங்கள – பௌத்த நாடு அல்ல என்று மங்கள சமரவீர அண்மையில் வெளியிட்ட கருத்தானது தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், அமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக கூட்டு எதிரணி எடுக்கவுள்ள நடவடிக்கை என்னவென்று வினவியபோதே கம்மன்பில மேற்கண்டவாறு கூறினார்.
” மங்கள சமரவீர சிறைச்சாலையில் இருக்கவேண்டியவர். ஆனால், சுதந்திரமாக வலம் வருகின்றார். அவர் வகிக்கும் அமைச்சுப் பதவிதான் அவரை பாதுகாக்கின்றதெனில், அப்பதவியில் இருந்து அவரை தூக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க