அமைச்சர் ரிசாத் பதியுதீன் தொடர்பில் இராணுவத்தளபதி வெளியிட்டக் கருத்துக்கள், அரசியல் தரப்பில் இன்று பேசப்படும் கருத்துக்களாக மாறியுள்ளன.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தொடர்ந்து தெஹிவளையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இந்த ஆள் தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மூன்று தடவைகளாக தம்முடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்ததாக இராணுவத்தளபதி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும் தாம் கைதுசெய்யப்பட்டவர் தொடர்பில் எவ்வித தகவல்களையும் வழங்கவில்லை என்று இராணுவத்தளபதி மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டார்.
அமைச்சர் பதியுதீனின் இந்த தொலைபேசி உரையாடல், கைது தொடர்பில் செல்வாக்கு செலுத்துவதைப்போன்று இருந்ததா? என்ற கேள்விக்கு பதிலளித்த இராணுவத்தளபதி, தம்மைப் பொறுத்தவரை அது வேண்டுகோளாகவே இருந்தது என்று குறிப்பிட்டார்.
இதேவேளை தெஹிவளையில் கைதுசெய்யப்பட்டவர் தொடர்பில் எவ்வித தகவல்களையும் வழங்கமுடியாது என்றும் இராணுவத்தளபதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இராணுவத்தளபதியின் இந்தக்கருத்துக்களுக்கு முன்னதாக ரிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை நேற்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டின்பேரிலேயே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இராணுவத்தளபதியின் கருத்துக்களும் நாடாளுமன்றத்தில் பிரேரணை விவாதத்தின்போது எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கமுடியும்
கருத்து தெரிவிக்க