உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 900 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் பதிவு

இன்று (ஓகஸ்ட் 30) அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதற்கமைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் ஒரே நாளில் நம்பிக்கை அளிக்கும் வகையில் 900 கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இவ்முதலீட்டு ஈர்ப்பானது மதுரை,சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களிலுள்ள 4,100 பேருக்கு வேலைவாய்ப்புகளுக்கு வழி வகுக்குமெனவும் இன்னும் இருக்கும் இரு வாரங்களில் முதலீட்டை ஈர்க்கும் வேகம் தொடர்ந்தும் அதிகரிக்கப்படுமாயின் அமெரிக்காவிலிருந்து மேலும் அதிக முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்த்துக்கொள்ள முடியுமெனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க