தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிட்ட வகையில் 2023ம் ஆண்டு மார்ச் 09ம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடாத்தப்படாது ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க கடந்த ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் அப்போதைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ஆகியோர் செயற்பட்டமை அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்தோடு கூடிய விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க