2024 ஜனாதிபதி வேட்பாளர் விவாதமானது எதிர்வரும் செப்டம்பர் 07ம் திகதி திட்டமிட்டபடி நடைபெறுமென மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க ஜனாதிபதி வேட்பாளர் விவாதத்திற்கு அழைப்பு விடுத்த பிரதான வேட்பாளர்கள் போல் மற்ற வேட்பாளர்களும் ஆர்வம் காட்டுவதை கருத்திற் கொண்டு குறித்த விவாதத்தினை பல கட்டங்களாக செயற்படுத்திட மார்ச் 12 இயக்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு மார்ச் 12 பிரச்சாரத்தின் வழிநடத்தல் குழு 39 ஜனாதிபதி வேட்பாளர்களையும் வேட்பாளர் விவாதத்திற்கு அழைத்துள்ளதோடு ஓகஸ்ட் 24ம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன் march12movement@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது ஒப்புதலை அனுப்புமாறும் வேட்பாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க