புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரவீராங்கனைகளை ஐ.சி.சி அறிவிப்பு

ஜூலை மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீர வீராங்கனைகளாக மூவரை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

அதற்கிணங்க ஜூலை மாதத்திற்கான ஐ.சி.சி சிறந்த மகளிர் வீராங்கனைகளில் இலங்கை அணியின் தலைவர் சமரி அத்தபத்து பரிந்துரைக்கப்பட்டுள்ளதோடு இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான வாக்கினை ஐ.சி.சியின் உத்தியோக பூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசித்து அளிக்க முடியுமென ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க