புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

சர்வதேச டி20 போட்டியில் மோசமான சாதனை படைத்த இலங்கை அணி

பல்லகெலேவில் நேற்று (ஜூலை 30) நடைபெற்ற 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை எதிர்த்து இலங்கை களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 09 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை பெற்றது.
அதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை பெற்றது.

அதனடிப்படையில் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் மோசமான சாதனை
படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் (சூப்பர் ஓவர் உட்பட) அதிக தோல்விகளை (105 தோல்விகள்) சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை இலங்கை படைத்துள்ளது.

கருத்து தெரிவிக்க