இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிப்பு

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதற்கிணங்க குறித்த இடைக்கால உத்தரவின் போது சட்டத்திற்கமைய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொருத்தமான நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரு.யசந்த கோதாகொட, திரு. அச்சல வெங்கப்புலி மற்றும் திரு. மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற குழு குறித்த உத்தரவுகளை அறிவித்துள்ளது.

அத்தோடு குறித்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேலும் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி அதிமேதகு கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் சமர்ப்பித்த 09 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு ஏற்று உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கருத்து தெரிவிக்க