இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஹிருணிகாவுக்கு பிணை

2015ம் ஆண்டு டிசம்பர் 21ம் திகதி தெமட்டகொட கடையொன்றில் பணிபுரிந்த அமில பிரியங்க எனும் இளைஞனை கறுப்பு டிஃபென்டர் காரில் கடத்திச்சென்றதற்காகவும் சிறையில் அடைத்து தாக்கியமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியென நிரூபிக்கப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்க் தண்டணை விதிக்கப்பட்டதோடு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று வருட சிறைத்தண்டனை மற்றும் மூன்று இலட்சத்து அறுபதாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

அதற்கிணங்க குறித்த தண்டனைக்கு எதிராக ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீடு செய்துள்ள நிலையில் ஹிருணிகாவை பிணையில் விடுவிக்குமாறு அவரின் சட்டதரணி முன்வைத்த பிணை கோரிக்கைக்கு அமைய ஹிருணிகா பிரேமச்சந்திரவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தீர்ப்பு வழங்கியுள்ளார்.

கருத்து தெரிவிக்க