வர்த்தக அமைச்சர் திரு.நளீன் பெர்னாண்டோ இலங்கைக்கு மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான தீர்மானம் இன்று (ஜூலை 22) அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க இன்று முதல் ஒரு முட்டை 42 ரூபாய்க்கு சந்தையில் விநியோகிக்கப்படுமென முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு எதிர்காலத்தில் முட்டையின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென முட்டை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் மீண்டும் முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க