இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இலங்கைக்கு வருகை தந்த ஒட்ரே அசோலே

இன்று (ஜூலை 16) யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் திருமதி.ஒட்ரே அசோலே அவருடைய தூதுக்குழுவினருடன்
இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

அரசாங்கத்தின் அழைப்பிற்கிணங்க வருகை தந்த திருமதி ஒட்ரே அசோலே எதிர்வரும் 19ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தோடு ஒட்ரே அசோலே ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பதில் வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஒட்ரே அசோலே
யுனெஸ்கோ அமைப்பில் இலங்கை உறுப்புரிமை பெற்றதன் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நெலும் பொக்குண திரையரங்கில் நடைபெறவுள்ள கொண்டாட்ட நிகழ்விலும் கலந்துகொள்வதுடன் இலங்கையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்திற்கும் விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. .

கருத்து தெரிவிக்க