சினிமாபுதியவை

‘ராயன்’ பட டிரைலர் ரிலீஸ் திகதி அறிவிப்பு!

தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘ராயன்’ திரைப்படத்தில், தனுஷ் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோரின் நடிப்பில்,ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது.

அத்துடன், படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் ‘ராயன்’ திரைப்படம் ஜூலை 26ம் தேதி அன்று திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் படத்தின் டிரைலர் வருகின்ற ஜூலை 16ம் திகதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க