இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் சிம் கார்டுகள் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க நாட்டில் முறையான அடையாளங்கள் இன்றி சுமார் 2 மில்லியன் சிம் கார்டுகள் பாவனையில் இருப்பதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்; 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிம் அட்டைகளை பெற்றுக்கொள்ளும் போது தேசிய அடையாள அட்டையை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.
அத்தோடு சிம் கார்டுகளை பெற்றுக்கொள்ளும் போது தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட மூலம் அறிமுகப்படுத்தியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க