இன்று (ஜூலை 01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி ஒரு லீட்டர் ஒட்டேன் 95 ரக பெற்றோலின் விலை 41 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 379 ரூபாவாகும்.
92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 344 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் லங்கா சுப்பர் டீசல் 22 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 355 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஒட்டோ டீசலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது லீற்றர் 314 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
கருத்து தெரிவிக்க