உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்

இனவாத பொறிக்குள் சிக்கவேண்டாம் – நீதி அமைச்சர் கோரிக்கை

” இனவாதத்துக்கு தூபமிட்டு அரசியல் இலாபம் தேடுவதற்கு சிலர் வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றனர். எனவே, இந்த பொறிக்குள் மக்கள் சிக்கிவிடக்கூடாது.” என்று நீதி அமைச்சர் தலதா அத்துகோரள கோரிக்கை விடுத்தார்.

இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,

” பயங்கரவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி அரசியல் நடத்தும் சிலரும் நம் சமூகத்தில் இருக்கின்றனர். இனங்களுக்கிடையில் எவ்வாறு முரண்பாடுகளை தோற்றுவிக்கலாம் என கழுகுக்கண்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

எனவே, இந்த சதி வலைக்குள் சிக்கிவிடக்கூடாது. அனைவரும் ஐக்கியமாக வாழவேண்டும்.  நாட்டின் அபிவிருத்தி குறித்தும் சிந்திக்கவேண்டும். கிராமங்களில் பிரச்சினைகளை தோற்றுவிக்ககூடாது. பௌத்தர்கள் எனப்படுபவர்கள் பழிவாங்குபவர்கள் அல்லர்.” – என்றார்.

 

கருத்து தெரிவிக்க