சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

3 இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை – வெளியானது வர்த்தமானி

தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி ஆகிய    இஸ்லாமிய அமைப்புகள் தடைசெய்யப்பட்டிருந்தன. இதை சட்டபூர்வமாக்குவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார்.

21/4 தாக்குதலையடுத்து மேற்படி இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை, அவசரகால சட்டத்தின்கீழ் ஜனாதிபதி தடை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்புகளை ஜனாதிபதி தடைசெய்திருந்தாலும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல்10 நாட்கள் கடந்தும் வெளியாகாததால் அது குறித்து அரசியல் கட்சிகள் விசனத்தை வெளியிட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க