உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்முக்கிய செய்திகள்

பிரதமர் தலைமையில் கூடுகிறது தேசிய பாதுகாப்பு சபை

தேசிய பாதுகாப்பு பேரவைக் கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெறலாம் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

நாட்டில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கும், முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்துவிட்டே ஜனாதிபதி சீனாவுக்கு புறப்பட்டார்.

அத்துடன், பதில் இராஜாங்க அமைச்சரையும் நியமித்தார். இந்நிலையிலேயே பாதுகாப்பு பேரவை இன்று கூடவுள்ளது.

நாட்டில் சில பகுதிகளில் நேற்று ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள், ஏனைய பகுதிகளிலும் பரவாதிருப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்தனர். பொலிஸ் ஊரடங்கு சட்டமும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இன்றுகாலை வடமேல் மாகாணம்தவிர ஏனைய பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் வழமைக்கு திரும்பவில்லை. மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்லவில்லை.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பாதுகாப்பு நிலைவரம் தொடர்பிலும், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் ஆராய்வதற்காக பாதுகாப்பு பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

 

 

கருத்து தெரிவிக்க