முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை தாக்குதல்களை அடுத்து இலங்கையில் பதற்றநிலை தொடர்கிறது.
வன்முறைகளை அடுத்து, குறிப்பாக புத்தளம், குருநாகல்,மற்றும் கம்பஹாவில் முஸ்லிம் மக்களை வீடுகளிலேயே இருக்குமாறு கோரப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவரை கோடிட்டு ஏஎப்பி தெரிவிக்கிறது.
நேற்று இரவு இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து இன்று காலைவரை ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
குருநாகல் ஹெட்டிபொல நகரில்,வன்முறையாளர்கள், கற்களை எறிந்தும் உந்துருளி, மற்றும் சிற்றூந்துகளை எரியூட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல வியாபாரத்தளங்களும் தாக்கப்பட்டுள்ளன.
சிலாபத்தில் முஸ்லிம் ஒருவர் தமது பேஸ்புக்கில் “சிரிக்க வேண்டாம் ஒருநாள் நீங்கள் அழவேண்டி வரும்” என்ற வசனத்தை பதிவிட்டிருந்தார்.
இதனை மையமாக்கொண்டே அங்கு வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கருத்து தெரிவிக்க